SuperTopAds

மக்களின் காணிகளை மக்களிடம் கொடுத்துவிட்டு இராணுவத்தை வல்லைவெளிக்கு அனுப்புங்கள்..! கூட்டமைப்பு காரசாரம்..

ஆசிரியர் - Editor I
மக்களின் காணிகளை மக்களிடம் கொடுத்துவிட்டு இராணுவத்தை வல்லைவெளிக்கு அனுப்புங்கள்..! கூட்டமைப்பு காரசாரம்..

யாழ்.பலாலி விதியின் கிழக்க பகு்கமாக உள்ள மக்களின் காணிகளை மக்களிடம் வழங்கி அந்த காணிகளுக்கு பதிலாக இராணுவத்தினருக்கு வல்லையில் காணிகளை வழங்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கூறியுள்ளனா். 

யாழ்.மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்திலேயே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வலி.வடக்கில் பலாலி வீதியின் கிழக்கு பக்கமாக ஜே/244, ஜே/245, ஜே/252, ஜே/253 மற்றும் ஜே/254 கிராம சேவகர் பகுதிகளை உள்ளடக்கிய 1829 பேருக்குச் சொந்தமான 727 ஏக்கர் காணி விடுவிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது படை அதிகாரிகள் வேறு பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட முகாம்களை மேற்படி பகுதியில் அமைப்பதற்கு திறைசேரியிலிருந்து நிதி கோரியிருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்படி பகுதி மக்கள் காணிகளை உள்ளடக்கியது.இங்கு முகாம் அமைக்காததால் படையினருக்கான முகாமை வல்லையில் அமைக்குமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரினர். இந்நிலையில் மேற்படி பகுதியில் தேவையான பகுதியை எடுத்துக்கொண்டு 

ஏனையவற்றை விடுவிப்பதுடன் மிகுதியை வல்லையில் முகாமை அமைப்பதற்கான காணியை இனம் காணுமாறு கோரப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநரால் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக 

வட மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இது படையினர், அரச அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்கள்
சார்பில் ஒருவரையும் கொண்டதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை
சேனாதிராசா, எஸ்.சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிபர் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.