27 வருடங்களின் பின் வல்லை- அராலி வீதி ஊடாக பஸ் சேவையை ஆரம்பிக்க இராணுவம் இணக்கம்..!

ஆசிரியர் - Editor I
27 வருடங்களின் பின் வல்லை- அராலி வீதி ஊடாக பஸ் சேவையை ஆரம்பிக்க இராணுவம் இணக்கம்..!

வல்லை-அராலி வீதியுடனான பஸ் போக்குவரத்தை அனுமதிப்பதற்கு  யாழ்மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று சனிக்கிழமை ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

இதில் (B-437 )வல்லை -அராலி வீதியின் அச்சுவேலி- வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால் வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும் எப்போது திறக்கப்படும் என கூறப்படவில்லை. பலாலி விமான நிலையத்திற்கு மக்கள் சென்று வர இவ்வீதி அவசியமாகும் என்பதுடன். தற்போது அச்சுவேலியில் இருந்து தெல்லிப்பளை 

வைத்தியசாலைக்கு வரவேண்டுமாயின் பல கிலோமீற்றர் சுற்றியே வரவேண்டியுள்ளது. இந்து வீதியை திறந்து விடுமாறு பலதரப்பட்டவர்களாலும் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு