யாழ்ப்பாணம்- பொன்னாலை வீதிக்கு விடிவு..! 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் தொடங்கியது புனரமைப்ப..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- பொன்னாலை வீதிக்கு விடிவு..! 4 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் தொடங்கியது புனரமைப்ப..

யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதியை புனரமைப்புச் செய்யும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

வீதிப் புனரமைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் காக்கைதீவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமானப் பொருட்களும் சேமிக்கப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களும் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, அராலி செட்டியாமடத்தில் வீதியோரக் குடியிருப்பாளர்கள் வேலிகளை அகற்றி வீதிப் புனரமைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளனர். கட்டுமானப் பொருட்கள் வீதியோரமாக பறிக்கப்பட்ட பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வரையான 55.38 கிலோமீற்றர் வீதி 4000 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் - பொன்னாலை வீதி புனரமைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு