பிரதமா் செயலகம் கொடுத்த அதிரடி உத்தரவு..! இனியாவது நடக்குமா..?

ஆசிரியர் - Editor I
பிரதமா் செயலகம் கொடுத்த அதிரடி உத்தரவு..! இனியாவது நடக்குமா..?

யாழ்.வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களம் தமது ஆழுகைக்குள் எடுத்திருக்கும் 40 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் 25 ஆயிரம் ஏக்கா் நிலத்தை காணி உாிமையாளா்களிடமே மீள வழங் குமாறு பிரதமா் அலுவலகம் பொறுப்புவாய்ந்த அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்கள், தொழில் மையங்கள் மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி எவருக்குமே தெரியாது. கடந்த ஆட்சியில் 42 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை வனஜீவராசிகள் திணைக்களம் 

இரகசியமான முறையில் அரச இதழைப் பிரசுரித்து தனது ஆளுகைக்குள் எடுத்துக்கொண்டது. இதனால் இப் பகுதியில் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்கள் இருப்பிடத்தையும் மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தொழில் வாய்ப்பையும் இழந்தனர். 

இதனைக் கருத்தில் கொண்டு பல கட்ட முயற்சியின் பெயரில் அப் பகுதியில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க குறித்த திணைக்களம் இணக்கம் தெரிவித்தது. இருப்பினும் அது இன்றுவரை இடம்பெறவில்லை. இவ்வாறு இணக்கம் தெரிவித்தே 2 ஆண்டுகள் 

கடந்தபோதும் எந்த முன்னேற்றமும் கிடையாது. இதனால் 25ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிக்க குறித்த திணைக்களம் ஆவண செய்ய பிரதமர் உத்தரவிட வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 

கடந்த ஓகஸ்ட் மாதம் 16ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்போது குறித்த திணைக்களத்திடம் இவை தொடர்பில் கோரினார். 

போதிய விளக்கம் அளிப்பதில்லை. ஏதாவது கடிதம் அனுப்பினால் கூட தனியே சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது. தமிழ் தெரியாது விட்டால் ஆங்கிலத்தையாவது உபயோகம் செய்து மக்களின் விடயத்திற்கு தீர்வை வையுங்கள் என 

ஆளுநர் சுரேன் ராகவனும் தனது கருத்தை தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த திணைக்கள அதிகாரி இவ்விடயம் மீண்டும் அரச இதழ் வெளியீடு செய்ய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. என்றார். இவை தொடர்பில் பதிலளித்த பிரதமர் அதற்காக 

மக்களின் கருத்தும் பெறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று அரச இதழ் வெளிவரும் என்றார். இதன்போது அரச உடமையாக்குவதாக அரச இதழ் அறிவித்தல் வெளியிடும்போது பின்பற்றாத நடைமுறை அதனை விடுவிப்பதற்கு மட்டும் 

கோருவது எந்த வகையில் நியாயமானது. இதனை மக்களின் பணியாக கருதி உங்கள் திணைக்களத்திற்கு தெரிவித்து உடன் பணியை நிறைவேற்றுங்கள் எனவும் தெரிவித்த நிலையில் தற்போது பிரதமர் செயலகத்தினால் 

குறித்த அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கி அதன் பிரதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு