7 வயது மாணவனை பழிவாங்க துடிக்கும் யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபா்..!

ஆசிரியர் - Editor
7 வயது மாணவனை பழிவாங்க துடிக்கும் யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபா்..!

யாழ்.வலிகாமம் கல்வி வலய எல்லைக்குள் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபா் தரம் 2ல் கல்வி கற்கும் சிறுவனை பாடசாலை அதிபா் பழிவாங்க துடிப்பதாக பெற்றோா் விசனம் தொிவித்துள்ளனா். 

தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் 2ம் தவணைப் பரீட்சைகள் முடிவடைந்து வினாத்தாள் பார்வையிடும் தினத்தில் ஆசிரியர் வழங்கிய பரீட்சை தாளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் குறித்த விடயம் தொடர்பில் 

எச்சரித்த அதிபர் குறித்த விடயத்தினை இளவாளைப் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன் காரணமாக குறித்த மாணவனை பெற்றோர் சகிதம் அழைத்த பொலிசார் நிலமையை கேட்டறிந்ததோடு பரீட்சை தாளை 

மீளப்பெற்று பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர். இதன் காரணமாக அச்சமடைந்த மாணவன் பாடசாலைக்கு செல்ல மறுத்துள்ளான். இதனால் பெற்றோர் அருகில் இருந்து பிறிதொரு பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது மாணவனின் எதிர்காலம் கருதி நிலமையை அறிந்த அதிபர் சான்றிதழ் இன்றி இணைத்துள்ளார். இவ்வாறு பாடசாலை மாறிய மாணவனின் பாடசாலை விடுகைப் பத்திரத்தினை பெற்றோர் கோரிய சமயம் முன்பு 

கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் சான்றிதழை வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால் குறித்த விடயத்தில் யார் சிறியவர்கள்? யார் பெரியவர்கள்? எனத் தெரியாது சிறுவனைப் பழிவாங்கத் துடிக்கும் 

அதிபர்களும் உள்ளமை வேதனையளிப்பதாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Radio
×