தமிழ்தேசிய விடுதலையை விரும்பிய ராம் ஜெயத்மலானிக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்..!

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய விடுதலையை விரும்பிய ராம் ஜெயத்மலானிக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல்..!

தமிழ்தேசியத்தையும், தமிழ்தேசிய விடுதலைக்கான போராட்டத்தையும் நேசித்த இந்திய முன் னாள் சட்டத்துறை அமைச்சரும், சட்டத்தரணியுமான ராம் ஜெத்மலானியின் மறைவை ஒட்டி கிளிநொச்சியில் நினைவஞ்சலி கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஈகைசுடரினை ஏற்றினார். 

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து முன்னால் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மலர் வணக்கத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அங்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி உரையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆற்றினார். இதன்போது அவர் மறைந்த சட்டத்தரணி தொடர்பில் நினைவேந்தியமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு