ஸ்ரீலங்கன் எயா்லைன்ஸ் விமானங்களில் அப்பிள் மக்புக் மடிகணனிகளுக்கு தடை..!

ஆசிரியர் - Editor
ஸ்ரீலங்கன் எயா்லைன்ஸ் விமானங்களில் அப்பிள் மக்புக் மடிகணனிகளுக்கு தடை..!

அப்பிள் நிறுவனத்தின் 15 அங்குல “மக்புக்” மடிகணனிகளை ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங் களில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி விமான பயணிகள் தமது கைப்பையிலும் வேறு பொதிகளிலும் குறித்த மடிக்கணணியை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கணனியின் மின் கலத்தில் இருக்கும் கோளாறு காரணமாக தீப்பிடிக்கும் அவதானம் இருப்பதாலேயே இவ்வாறு தடை விதிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளது.

அதேவேளை ஏற்கனவே மேலும் பல விமான சேவைகளில் குறித்த கணணியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×