முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! தீவிர பொலிஸ் பாதுகாப்பு, விசாரணைகளும் தீவிரம்..

ஆசிரியர் - Editor
முகமாலையில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! தீவிர பொலிஸ் பாதுகாப்பு, விசாரணைகளும் தீவிரம்..

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது மனித எலும்பு எச்ச ங்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கண்ணிவெடி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் வழமைபோன்று இன்றும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே 

நண்பகல் அளவில் மனித எலும்புகள், எச்சங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர். பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 

பிற்பகல் அளவில் சம்பவ இடத்துக்கு வந்த இலங்கைப் பொலிஸார் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டமை தொடர்பாகக் கண்ணிவெடி அகற்றும் 

பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் பார்வையிட்டனர். 

சம்பவ இடத்துக்கு ஊடகவியலாளர்கள் எவரும் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. கண்ணிவெடி மீட்புப் பணியின்போது மனித எலும்புகள், 

எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக நாளை வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்ணிவெடி மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி சரவணறாஜா சென்று மனித எச்சங்களைப் பார்வையிட்ட பின்னரே 

அது பற்றிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மனித எலும்புகள், 

எச்சங்களை நீதிபதி பார்வையிடும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மனித எலும்புகள், 

எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.  2009 ஆம் ஆண்டு முதல் குறித்த பிரதேசம் இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் 

இருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். கண்ணிவெடிகள் அகற்றப்படாமையினால் இதுவரை அங்கு மீள் குடியேற்றமும் இடம்பெறவில்லை.

Radio
×