திடீரென தீ பிடித்து எரிந்த பேருந்து, வீட்டின் மீதும் தீ பற்றியது. பருத்தித்துறையில் சற்று முன் சம்பவம்.

ஆசிரியர் - Editor
திடீரென தீ பிடித்து எரிந்த பேருந்து, வீட்டின் மீதும் தீ பற்றியது. பருத்தித்துறையில் சற்று முன் சம்பவம்.

பருத்தித்துறை - வல்லிபுர பரியார் வீதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மின் ஒழுக்கினால் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்தபோதும் பேருந்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. 

மேலும் தீ அருகிலிருந்த வீட்டின் மீதும் பற்றியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Radio
×