யாழ்.பல்கலைகழக மன்றலில் ஆரம்பமானது சுழற்சிமுறை உணவு தவிா்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor
யாழ்.பல்கலைகழக மன்றலில் ஆரம்பமானது சுழற்சிமுறை உணவு தவிா்ப்பு போராட்டம்..!

கல்விசார ஊழியா்கள் ஆட்சோ்ப்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்டவா்கள் யாழ்.பல்கலைகழக முன்றலில் சுழற்சி முறையிலான உணவு தவிா்ப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனா். 

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டது. அந்த பட்டியலில் அரசியல்வாதிகளின் 

சிபாரிசுகளினால் வந்தவர்களே உள்ளதாகவும் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தே பல்கலை ஊழியர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.தமக்கான நீதி கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் 

இனியும் தாமதிக்காது சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Radio
×