வவுனியா பொது வைத்தியசாலையில் பதற்றம்..! மோப்ப நாய்களை பயன்படுத்தி தீவிர தேடுதல்..

ஆசிரியர் - Editor
வவுனியா பொது வைத்தியசாலையில் பதற்றம்..! மோப்ப நாய்களை பயன்படுத்தி தீவிர தேடுதல்..

வவுனியா பொது வைத்தியசாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கவு ள்ளதாகவும் வந்த அனாமதேய தொலைபேசி அழைப்பினையடுத்து வைத்தியசாலையில் கடும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியசாலையை பொலிஸார் சுற்றிவளைத்ததோடு பொலிஸ் மோப்ப நாய்களைக் கொண்டு 

குண்டுகள் இருக்கின்றனவா என்ற தீவிர சோதனையையும் மேற்கொண்டனர்.இவ்வாறு குண்டு இருப்பதாக வந்த எச்சரிக்கை அழைப்பு காட்டுத்தீயாக பரவியதை அடுத்து வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் 

மட்டுமன்றி வைத்தியசாலை ஊழியர்களும் பெரும் அச்சமடைந்தனர்.சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Radio
×