மூத்த ஊடகவியிலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான வித்தியாதரனின் பாராட்டு விழா!

ஆசிரியர் - Admin

மூத்த ஊடகவியிலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான வித்தியாதரனின் பிறந்தநாள் கௌரவிப்பும் பாராட்டு விழாவும்.....

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த அறுபது கண்ட மூத்த ஊடகவியியலாளர் என்.வித்தியாதரன் அவர்களுடன் யாழில் ஓர் இனிய மகிழ்வான மாலைப் பொழுது நிகழ்வு யாழ் நகரிலுள்ள பிள்ளையார் இன் விடுத்தியில் இன்று மாலை நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றல் அகவணக்கத்துடன் நல்லை ஆதீனக் குரு முதல்வர் சிறில சிறி ஞானதேசிக பராமாச்சாரிய சுமாகிளின் ஆசியுரையுடன் நிகழ:வுகள் ஆரம்பமாகின. இதன் போது ஊடகவியியலாளர் வித்தியாதரனின் அறுபதாவது பிறந்த நாள் கே; வெட்டப்பட்டதுடன் வித்தியாதருக்கு மாலை அணிவித்து பொண்ணாடை போர்த்தி வாழ்த்துமடல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

உலகத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமச்சந்திரன். ஏன்.சிறிக்காந்தா, வீ.ஆணந்தசங்கரி, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியொரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், மதத்தலைவர்கள், ஊடகவியியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள். எழுத்தாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு