கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெறாத வனிதா!!!

ஆசிரியர் - Admin
கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெறாத வனிதா!!!

பிக் பாஸ் 3, 78 வது நாளை முடித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் எதிர்பாரதவிதமாக சேரன் வெளியேறி அதிர்ச்சியளிக்க காத்திருக்கையில், அவர் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்தார்.

சேரன் வெளியேறியபின் வருத்தத்துடன் வனிதா, “நேர்மையாக இருப்பதைவிட எந்த வேலையும் செய்யாமல், டாஸ்க்கும் செய்யாமல் இருந்தால் மட்டுமே உள்ளே இருக்கமுடியும் என்று நொந்தார்.

 மேலும் ஷெரினிடம் நான் கேப்டன்சி டாஸ்க்கில் பங்கேற்கமாட்டேன் என்று பிக் பாஸிடம் சொல்வேன், பிக் பாஸ் அதனை ஒத்துக் கொண்டால் நீ போட்டியிடு என்பதுபோலக் கூறினார்.

 இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தாலும், இவர்களுக்குள் முன்பு நடந்த அந்த கசப்பான அனுபவங்கள் உள்ளதாகவே தெரிகிறது.

கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெற வேண்டும் என்று பிக் பாஸ் தெரிவித்தார், அப்போது கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெற விருப்பமில்லை என்று வனிதா கூறினார். கேப்டன்சி டாஸ்க்கானது, வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கான ஒரு விஷயமாகும் என வனிதா கூறினார்.

நிச்சயம் இந்தமுறை நான் நாமினேட் ஆவேன், மக்கள் விரும்பினால் நான் உள்ளே தொடர்கிறேன், இல்லையெனில் வெளியே வரத் தயார் என்று கூறினார்.

பிக் பாஸ் அதனை ஒத்துக் கொள்ளவில்லை, நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றார், சரி என்று கூறிய போட்டியில் பங்கேற்க சென்றார், பின்னர் போட்டி தொடங்குவதற்கு முன்னரே விட்டுக்கொடுப்பதாக கூறி போட்டியிலிருந்து வெளியேறினார்.

Radio
×