வஞ்சம் இல்லாமல் அனைவரும் நாமினேட் செய்தது இவரைத்தான்!!!

ஆசிரியர் - Admin
வஞ்சம் இல்லாமல் அனைவரும் நாமினேட் செய்தது இவரைத்தான்!!!

பிக் பாஸ் 3, 78 வது நாளை முடித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் எதிர்பாரதவிதமாக சேரன் வெளியேறி அதிர்ச்சியளிக்க காத்திருக்கையில், அவர் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்தார்.

நாமினேஷனில் குத்து குத்து என்று அனைவரும் வனிதாவின் பெயரை குத்திவிட்டனர். வழக்கம்போல் நேற்று, இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

தலையணை டாஸ்க்கில் மோசமான பெர்பாமன்ஸால் கவின் இந்த வாரத்திற்கு நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.

அதன்பின்னர் முதலாவதாக நாமினேட் செய்த வனிதா, தர்ஷன் மற்றும்  ஷெரின் பெயரை நாமினேட் செய்தார்

கவின் வனிதாவையும் ஷெரினையும், அடுத்து லோஸ்லியா வனிதாவையும் ஷெரினையும், சாண்டி வனிதாவையும் ஷெரினையும் நாமினேட் செய்தனர். 

செமயான பிளான் என்று கவின்-லாஸ்லியா-சாண்டி ஆகியோர் ஒரே மாதிரியாக நாமினேட் செய்ததில் தெளிவாகத் தெரிந்தது.

ஷெரின் வனிதா மற்றும் சாண்டியையும், முகென் வனிதா மற்றும்  தர்ஷனையும், தர்ஷன் வனிதா மற்றும் சாண்டியையும் நாமினேட் செய்தனர்.

கேப்டன் லாஸ்லியா மற்றும் முகினை தவிர்த்து பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் உள்ளனர்.

Radio
×