தர்ஷனுக்கு உப்புக் காப்பி… லாஸ்லியாவுக்கு 1 கிலோ ஐஸ்கிரீமா?

ஆசிரியர் - Admin
தர்ஷனுக்கு உப்புக் காப்பி… லாஸ்லியாவுக்கு 1 கிலோ ஐஸ்கிரீமா?

பிக் பாஸ் 3, 78 வது நாளை முடித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் எதிர்பாரதவிதமாக சேரன் வெளியேறி அதிர்ச்சியளிக்க காத்திருக்கையில், அவர் சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்தார்.

நாமினேஷனில் குத்து குத்து என்று அனைவரும் வனிதாவின் பெயரை குத்திவிட்டனர். அதன்பின்னர் பிக் பாஸ் மீயூசிக் சேர் டாஸ்க் போல் ஒன்றைக் கொடுத்தார்.

கையில் பந்தினை மாற்றி மாற்றி போட்டு இறுதியில், பந்து யாரிடம் வந்து சேர்கிறதோ, அவர்கள் ஒரு சீட்டை எடுத்து, அதில் உள்ள டாஸ்க்கை ஒருவரைத் தேர்ந்தெடுத்து செய்ய வைக்க வேண்டும்.

இதில், முதலில் அவுட்டானார் சாண்டி, அதன்பின்னர் பவுலில் உள்ள சீட்டை எடுத்து ஒரு லிட்டர் ஐஸ்கிரீம்மை லோஸ்லியாவை சாப்பிட சொல்லி டாஸ்க் கொடுத்தார்.

2 வதாக அவுட்டானார் வனிதா. உப்பு காஃபி குடிக்கும் டாஸ்க் வந்தது, அப்போது யாருக்கு கொடுக்கவேண்டும் என்று யோசிக்கையில், தர்ஷன் முன் வந்து அதனை குடித்தார்.

3வதாக அவுட்டானார் கவின், பக்கெட்டில் உள்ள ஐஸ் வாட்டரை சாண்டியின் தலைமேல் ஊற்றி  டாஸ்க்கை முடித்தார்.

4 வதாக அவுட்டானார் ஷெரின், கவின் தலையில் 10 முட்டை உடைத்து டாஸ்க் முடித்தார்.  அதற்கு சாரியும் கூறினார்.

5 வதாக அவுட்டானார் முகென், சூப்பரான டாஸ்க்காக தர்ஷனுக்கு கிரில் சிக்கன் சாப்பிட வேண்டும். என டாஸ்க் கொடுத்தார்.
 

அழகு பொண்ணு  ஷெரின் முகத்திற்கு கருப்பு பெயிண்ட் தர்ஷன் அடித்து டாஸ்க்கை முடித்தார்.

Radio
×