மரண தண்டணை வேண்டுமா? வேண்டாமா? யாழ்ப்பாணத்தில் கருத்து கணிப்பு. 94 வீதம் பேர் வேண்டும் என கருத்து.

ஆசிரியர் - Editor I
மரண தண்டணை வேண்டுமா? வேண்டாமா? யாழ்ப்பாணத்தில் கருத்து கணிப்பு. 94 வீதம் பேர் வேண்டும் என கருத்து.

மரண தண்டணை வேண்டுமா? வேண்டாமா? என யாழ்.மாவட்டத்தில் ஐனாதிபதி செயலகம் நடாத்திய கருத்து கணிப்பில் மரண தண்டணை வேண்டும் என 94 வீதமான வாக்குகள் வழங்கப்பட்டிருக்கிறது.

யாழ். கோட்டை முற்றவெளியில் தற்போது இடம்பெற்றுவரும் என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா கண்காட்சியில், அந்த விடயம் தெரியவந்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 93.77 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.

இந்த கண்காட்சி இடம்பெறும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலக அலுவலக கூடத்தில் இக்கருத்துக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதற்கான பதிலை Touch Screen பயன்படுத்தி வழங்குவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 6.23 சதவீதமானோர் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்டவர்களை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவித்ததை அடுத்து அரசியல் காட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஐக்கிய நடுகள் சபை மற்றும் சர்வதேசமும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு