SuperTopAds

மீனவர்கள் மீது தாக்குதல்,துப்பாக்கி சூடு..! 12 கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
மீனவர்கள் மீது தாக்குதல்,துப்பாக்கி சூடு..! 12 கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல்..

புல்மோட்டை பகுதியில் 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்திய கடற்படையினர் 12 பேரை 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் இன்றைய தினம் துறைமுக பொலிஸார் கடற்படையினரை ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இருபத்தி எட்டாம் திகதி புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையினரின் சமிஞ்சையை பொருட்படுத்தாது   தப்பியோடியதாக  4 மீனவர்களையும் கடற்படையினர் பிடித்து அவர்களை தாக்கி சூடு நடத்திய நிலையில் அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில் 4 மீனவர்களும் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குச் சென்று நீதவான்  அம்மீனவர்கள்  4 பேரையும்  தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்தனர். 

இதேவேளை தங்களை தாக்கியதுடன் வெடி வைத்ததாகவும் இதனால் ஒரு மீனவரின் காலில் துப்பாக்கி ரவை ஒன்று சத்திர சிகிச்சையின் பின்னர் மீட்கப்பட்டதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். 

இதனைடுத்து திருகோணமலை பிரதம நீதிமன்ற நீதவான் எம் எச் எம் ஹம்ஸா நான்கு மீனவர்களின் வைத்திய அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் கட்டளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.