மித மிஞ்சிய வேகம்..! இரு வயோதிபா்களை மோதி தள்ளிய இராணுவ வாகனம்..

ஆசிரியர் - Editor I
மித மிஞ்சிய வேகம்..! இரு வயோதிபா்களை மோதி தள்ளிய இராணுவ வாகனம்..

திருகோணமலை- கந்தளாய் தம்பலகாமம் பகுதியில் இராணுவ வாகனம் முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் இருவா் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இவ்விபத்து நேற்றிரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமம்- பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த இப்பவே சித்தரவேல் லோகராணி (52 வயது) மற்றும் 

முருகேசு சித்தரவேல் (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து தெரியவருவதாவது கன்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் 

இராணுவ வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் சீனக்குடா இராணுவ முகாமில் கடமையாற்றும் லாஸ் கோப்பல் அம்பாறை - உஹன பகுதியைச் சேர்ந்த இந்திக்க சதறுவன் 

அபேகோன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்றைய தினம் கன்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை 

மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு