முதல்முறையாக லாஸ்லியாவினை வெளுத்து வாங்கிய கமல்!!

ஆசிரியர் - Admin
முதல்முறையாக லாஸ்லியாவினை வெளுத்து வாங்கிய கமல்!!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், கவின் மற்றும் லாஸ்லியாவினை டார்கெட் செய்த கமல், உங்களை நீங்களே ஏன் நாமினேட் செய்தீர்கள் என்று கேட்டார்.

தனக்கு தைக்க தெரியாதது பற்றிக்கூறிய அவர், நான் செய்யவில்லிய, மற்றவர்கள் செய்தார்கள் என்றுகூறி தன் பெயரைக் கூறியதாகக் கூறினார்.

அதன்பின்னர் லாஸ்லியா பக்கம் திரும்பிய கமல் ஹாசன் பச்சோந்தி அவார்டு கொடுத்ததற்கு ஏன் இவ்வளவு கோபம் என்று கேட்டார். 

மரியாதை என்பது வயதிற்கு கொடுக்கப்படாதது தவறில்லை, ஆனால் சபை நாகரீகம் என்று உண்டு, அதற்கு மரியாதை கொடுத்திருக்கலாம் என்றார்.

அவர்களின் சொந்த முடிவு அது கிடையாது, அவர்கள் மக்களின் பிரதிநிதியாக உள்ளே வந்தவர்கள். இதையே இப்படித் தூக்கிப்ப்போட்டால், வெளியே வந்து பார்க்கும்போது தெரியும், இந்த அவார்டை வேண்டாம் என்று சொன்னது சரியா? இல்லை நாமே தேடி எடுத்து எனக்கே சொந்தம் என்னும்படி இருக்குமா? என்று என கமல் ஹாசன் சொன்னார்.

லாஸ்லியா எதுவும் பேசாமல் சிரிக்க மட்டுமே செய்தார், அவர் எப்போதும் கமல் முன்னிலையில் சிரித்து மழுப்பக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.

Radio