பிக் பாஸ் வீட்டின் மிக நேர்மையான நபர் இவர்தான்!!
விஜய் தொலைக்காட்சியில் தினமும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
புதன்கிழமை விருந்தினராக உள்ளே வந்த அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோருடைய விருந்து உபசரிப்பு முடிந்துவிட்டது, இதனால் வெளியே வரவேண்டும் என்று கமல் ஹாசன் அறிவுறுத்த, மூவரும் மீண்டும் ஒருமுறை பிரியா விடை கொடுத்தனர்.
வெளியே வந்த அவர்கள் கமல் ஹாசனை சந்தித்ததோடு, அபிராமி மற்றும் மோகன் வைத்யாவை அழைத்து, உள்ளிருப்பவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் சொல்ல சொன்னார்.
தர்ஷனை அலைபாயுதே ஹீரோ என்றும், சாண்டியை கேமை சரியாக விளையாடுகிறீர்கள் என்றும், அடுத்து தன்னுடைய நண்பர் முகென் பாட்டு மட்டுமல்ல கேமையும் ஜெனியூனாக விளையாடுபவர் என்றார்
கவினிடம் வெளியில் நடப்பதை கண்டுகொள்ளாதே, உள்ளே இருக்க வேண்டுமென நினைத்தால், உள்ளே நடப்பதைப் பற்றி மட்டும் யோசி என்றார்.
லோஸ்லியா தெளிவாகவே விளையாடுகிறார் என்றார், ஆமாங்க, சேரன் விஷயத்தில் போதும் என்று சொல்லுகிற அளவு விளையாடிவிட்டார்.
ஷெரின் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் ஏஞ்சல் போல உள்ள நீ, எப்போதும் அப்படியே இரு என்றார்.
அதன்பின்னர் மோகன் வைத்யா வனிதாவின் வார்த்தைகளில் உள்ள கோபம் மனதளவில் கிடையாது என்று சொன்னார்.
சேரனைப் பற்றிக் கூறுகையில் நீங்கள் மிகவும் உத்தமமான மனிதர் என உணர்ச்சி பொங்கக் கூறினார். இதை எப்போதும் கடைபிடியுங்கள் என்று சொன்னார்.