கமல் ஹாசன் லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணியது ஏன்?
விஜய் தொலைக்காட்சியில் தினமும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
புதன்கிழமை விருந்தினராக உள்ளே வந்த அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோருடைய விருந்து உபசரிப்பு முடிந்துவிட்டது, இதனால் வெளியே வரவேண்டும் என்று கமல் ஹாசன் அறிவுறுத்த, மூவரும் மீண்டும் ஒருமுறை பிரியா விடை கொடுத்தனர்.
வெளியே வந்த அவர்கள் கமல் ஹாசனை சந்தித்ததோடு, அபிராமி மற்றும் மோகன் வைத்யாவை அழைத்து, உள்ளிருப்பவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் சொல்ல சொன்னார்.
இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் மற்றும் நம்பிக்கை கொடுத்தார் கமல் ஹாசன். அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசலாம் என்று வழக்கம்போல் ஆரம்பித்தார்.
போட்டியாளர்கள் சீரியஸாக விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். நேர்மை எதுவும் இன்றி, எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பது ஒரு ரகம், சேரன்போல் இப்படித்தான் ஜெயிக்கணும் என்பது 2 வது ரகம், இதில் பெரும்பாலானோர் 2 வது ரகத்திலேயே உள்ளனர் என்றார்.
அதன்பின்னர் லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணும்விதமாக, ஹலோவில் இவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை இப்போது தான் தெரிந்துகொண்டேன், இதுவரை அது ஹலோ மட்டுமே என்று எண்ணினேன் என்றார்.
கமல் ஹாசன் லாஸ்லியாவிற்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றால் மட்டுமே அது ஆச்சரியமாகும்.
சும்மாவே ஆட்டியூட் காட்டு காட்டுன்னு காட்டும் இந்தப் பொண்ணு இனி சொல்லவே வேண்டாம் பாக்கத்தான் போறீங்க.. முழுசா மாறின சந்திரமுகியை…