ஷெரின் கோபத்தால் பரிதவிக்கும் பிக் பாஸ் வீடு!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது, அதில் காதல் இருக்கும் இல்லையேல் கட்டாயம் சண்டைக் காட்சிகள் இருக்கும்.
டிஆர்பி ஐ எகிற வைக்க ஷாக்சி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்த இவர்கள் கவின்- லாஸ்லியா முகத்தினை போட்டியாளர்களுக்கு காட்டுவார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் வந்தால் எனக்கே என்ன? நான் ஒரு பிரச்சினையை கிளப்புகிறேன் என உப்பு சப்பில்லா பிரச்சினையை கிளப்புகிறார் வனிதா.
தர்ஷனுடனான நட்பினை விட்டு விலகும்படி ஷெரினுக்கு அறிவுரை கூறி சும்மா கிடந்த பிரச்சினையை தூசி தட்டி எழுப்பிவிட்டார் வனிதா.
வனிதா அக்கறையினால்தான் இதனை செய்தார், ஆனால் அதற்கான இடம், பொருள், ஏவல் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனை அவர் கொஞ்சம் கடைபிடித்திருக்கலாம்.
வெளியே சென்று உட்கார்ந்த ஷெரினுடன் சாக்ஷியும் சேரனும் பேசிக் கொண்டிருந்தனர், அப்போது வனிதா, மீண்டும் அறிவுரை கூறினார், இதனால் கடுப்பாகிப் போனார் ஷெரின், வனிதாவிடம் சண்டைப் போட்டார்.
உனக்கு அறிவு இல்லையா, இந்த உறவை எப்படி அஃபையர் என்று கூறினாய், உனக்கு என்ன தைரியம் என்று கேட்டு சண்டைப் போட ஆரம்பித்தார்.
ஷெரின் தனக்காக சண்டையிட்டது இதுவே முதல் முறையாகும். அதனால் பார்வையாளர்கள் பலரும் ஷெரினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.