SuperTopAds

கவின்தான் இந்த வீட்டிலேயே மிக நல்லவர்- தம்பட்டம் அடிக்கும் கவின்!!

ஆசிரியர் - Admin
கவின்தான் இந்த வீட்டிலேயே மிக நல்லவர்- தம்பட்டம் அடிக்கும் கவின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஒவ்வொரு நாளும் திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது, அதில் காதல் இருக்கும் இல்லையேல் கட்டாயம் சண்டைக் காட்சிகள் இருக்கும்.

டிஆர்பி ஐ எகிற வைக்க ஷாக்சி, அபிராமி, மோகன் வைத்யா உள்ளே நுழைந்துள்ளனர். உள்ளே நுழைந்த இவர்கள் கவின்- லாஸ்லியா முகத்தினை போட்டியாளர்களுக்கு காட்டுவார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் வந்தால் எனக்கே என்ன? நான் ஒரு பிரச்சினையை கிளப்புகிறேன் என உப்பு சப்பில்லா பிரச்சினையை கிளப்புகிறார் வனிதா.

பிக் பாஸ் ஆரம்பித்து 75 நாட்கள் ஆன நிலையில், கவின் ஆரம்பத்தில் இருந்ததுபோல் இப்போது இல்லை. அதிகபட்சமான அவலங்களை செய்தவராக இருப்பவர் கவின், ஆனால் அவர் ஏன் வெளியேற்றப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தொகுப்பாளர் கமல் ஹாசனும் இதுவரை  சாண்டி- கவின் செய்யும் எந்தத் தவறுகள் குறித்து பேசியதுகூட இல்லையே ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கமல்ஹாசனின் இந்தச் செயலை அவர்கள் அவர்கள் செய்வதுதான் சரி என்பதுபோல கவின் பேசுகிறார். வனிதா வாயைத் திறந்தாலே நீங்கள் தவறு செய்யாமல் உங்களை வீட்டைவிட்டு அனுப்பவில்லை என்று கூறினார்.

ஷாக்சி இப்போது உள்ளே நுழைந்தபின்னும், கவின் அதே டயலாக்கை சாண்டியிடம் கூறுகிறார். இந்த விஷயத்தை இப்படியே விட்டு வைத்தால், கவின் தான் மட்டுமே நல்லவர் என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்தவே மாட்டார்.