தலைக்கு ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நக்சலைட்டின் உயிரை காக்க தங்கள் தோளில் சுமந்து செல்லும் போலீசார்
சத்தீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் செயல்பட்டுவரும் நக்சலைட்டுகள் பொது அமைதிக்கு குந்தகம் விழைவிக்கும் வகையில் அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்களை அறங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை தடுத்து நிறுத்த சில மாநிலத்தால் அமைக்கப்பட்ட தனிப்படை பிரிவினருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் தேடப்பட்டுவந்த நக்சல் ஒருவனை கைது செய்தனர். அந்த நக்சலைட்டின் தலைக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த சோதனையின் போது காயமடைந்த நக்சலைட்டுக்கு சிகிச்சை அளிக்க அருகில் மருத்துவமனை இல்லாததால் சுமார் 12 கீ.மீட்டர் தூரம் அவரை போலீசார் தங்கள் தோளில் சுமந்து சென்றனர்.