மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

ஆசிரியர் - Admin
மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர், வினோத், அஜித் கூட்டணி இணைய இருக்கிறது. ஆக்‌ஷன் படமாக தயாராக இருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Radio