வடக்கு ரயில் பாதை விபத்துகள்- காரணம் யார்?
வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று டக்ளஸ் தேவானந்தா, வடக்கு ரயில்பாதை விபத்துக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக ரயில் கடவைகளில் பொலிஸாரினால் நபர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு சாரதிகளினதும் பொதுமக்களினதும் கவனயீனமே பிரதான காரணமாகவுள்ளது.
ரயில்கள் முன்னர்போல் 30,40, கிலோமீற்றர் வேகத்தில் வருவதில்லை. தற்போது 100,110 கிலோமீற்றர் வேகத்தில் வருகின்றன.நாம் இது தொடர்பில் அறிவித்தல் பலகைகளை வைத்துள்ளோம். இதனை வாகன சாரதிகளும் பொதுமக்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றார்.