SuperTopAds

10 ற்கும் மேற்பட்ட தற்கொலை தீவிரவாதிகள் நாட்டுக்குள் பதுங்கியிருக்கின்றனா்..! அதிா்ச்சியை உண்டாக்கிய ஞானசார தேரா்..

ஆசிரியர் - Editor I
10 ற்கும் மேற்பட்ட தற்கொலை தீவிரவாதிகள் நாட்டுக்குள் பதுங்கியிருக்கின்றனா்..! அதிா்ச்சியை உண்டாக்கிய ஞானசார தேரா்..

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை. என கூறியிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரா், 10ற்கும் மேற்ப்பட்ட தற்கொலை தீவிரவாதிகள் நாட்டுக்குள் இப்போதும் பதுங்கியிருப்பதாக கூறியிருக்கின்றாா். 

கலன்பிந்துனுவெல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், உலகில் 52 நாடுகளில் 40 வரையான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. 

இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களினால் கடந்த 6 மாத காலப்பகுதியில் உலக நாடுகளில் 9000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கவில்லை. 

இன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் நாட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் இருக்கின்றனர். இனம் என்ற வகையில் பாரிய அச்சுறுத்தலுக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம். எமக்கு மகிழ்ச்சியடைவதற்கு ஒரு விடயமும் கிடையாது.

சிங்களவர்களின் இருப்பு தொடர்பாக தீர்மானம் மிக்க நிலையில் இருந்தே நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். 2009ஆம் ஆண்டில் ஈழம் என்ற பெயரில் வந்த பயங்கரவாதத்தை இல்லாது செய்தோம். அதன் பின்னர் 10 வருடங்கள் கூட பூர்த்தியாகவில்லை.

இப்போது இஸ்லாம் பயங்கரவாதம் வந்துள்ளது. இது ஈழப் பயங்கரவாதத்தை விடவும் அச்சுறுத்தலானது. வடக்கில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவர்கள் ஈழத்திற்காக போராடினர். அவர்களுக்கு உதவவென நாடுகள் இருக்கவில்லை. 

வெளிநாட்டு டயஸ்போராக்களின் உதவி மாத்திரமே கிடைத்து வந்தது. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் அப்படியானது அல்ல. நாடுகள் பல இருக்கின்றன. இது மிகவும் பாரதூரமானது. முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லையென்றாலும் 

உலகில் பயங்கரவாதிகளாக கைது செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் எமது நாட்டில் மக்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க முடியாத வகையில் அச்சத்தை ஏற்படுத்தி 

மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதல் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல்தாரிகள் நாட்டில் எங்கேயோ இருக்கின்றனர். அவர்கள் எங்கே இருக்கினர் எனத் தெரியவில்லை.

தற்போது கிழக்கு மாகாணத்தில் தனியான அரசாங்கம் முன்னெடுக்கப்படுகின்றது. பொலிஸார் அங்கு சட்டத்தை செயற்படுத்துவதில்லை. அங்கு தனியான சட்டமே இருக்கின்றது. இந்த நாட்டில் நாளுக்கு நாள் இஸ்லாம் வகாப் வாதத்தின் எச்சரிக்கை தொடர்பாக 

நாங்கள் அறிவித்து வருகின்றோம். ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் பொலிஸார் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்.

இதேவேளை சிங்களவர்களின் உரிமைகளை மீள பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் போராட வேண்டும். பலவீனப்படுத்தப்பட்ட சிங்களவர்களை மீள எழுப்ப வேண்டும். நாங்கள் எமது நாட்டிலே கள்ளத் தோணிப் போன்றே இருக்க வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

நாங்கள் வாடகைக்கு இருப்பது போன்றே இருக்கின்றோம். எவ்வாறாயினும் இந்த நாட்டின் உரிமையாளர்கள் சிங்களவர்களே. நாங்களே இந்த நாட்டை உருவாக்கினோம். எமக்கென மொழி, கலாச்சாரம் என அனைத்தும் இருக்கின்றது.

ஆனால் 1815ஆம் ஆண்டில் எம்மிடம் இருந்து உரிமைகளை பறித்தெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பமாக இது இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இனத்தை பலவீனப்படுத்தும் வகையிலான

 தீர்மானத்தை எடுக்காது எமது இனத்தைக் கட்டியெழுப்பும் வகையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.