SuperTopAds

டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயற்சி: யாழ். பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு

ஆசிரியர் - Editor II
டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயற்சி: யாழ். பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதன் போது சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆறு குற்றச்சாட்டுக்களில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு போதுமான சாட்சியம் இல்லை என மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொலை முயற்சிக்கு உதவி புரிந்தமை தொடர்பில் குறித்த பெண்ணுக்கு 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி கொழும்பில் வைத்து தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தற்கொலைதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.