11.3 மில்லியன் ரசிகா்களை தன் பிடிக்குள் வைத்திருக்கும் காஜல் அகா்வால்..

ஆசிரியர் - Editor
11.3 மில்லியன் ரசிகா்களை தன் பிடிக்குள் வைத்திருக்கும் காஜல் அகா்வால்..

தென்னிந்திய நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதி ஹாசன், தமன்னா, இலியானா உள்ளிட்ட பலர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாகவே உள்ளனர்.ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு சமூக வலைதளங்கள் என்பது கதாநாயகிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. 

அதிலும், இன்ஸ்டாகிராம் செயலியின் மீது கதாநாயகிகளுக்கு கரிசனம் அதிகமாகவே உள்ளது. கதாநாயகிகளின் முகம் ரசிகர்களுக்கு மறந்துவிடக் கூடாது என்பதுதான் சினிமாவில் மிக முக்கியம். அதனால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தங்கள் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இதில், தென்னிந்திய நடிகைகளான காஜல் அகர்வால், 

சமந்தா, ஸ்ருதி ஹாசன், தமன்னா, இலியானா உள்ளிட்ட பலர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாகவே உள்ளனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களான நயன்தாராவும் அனுஷ்காவும் இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் வைத்துக்கொள்ளவில்லை என்பது தனி கணக்கு.இதில், யாருக்கு அதிக ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதில்தான் அந்த நாயகிக்கான மதிப்பு இருக்கிறது. 

அந்த வகையில், தென்னிந்திய நடிகைகளில் 11.3 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் முதலிடத்தை இளைஞர்களின் கனவுக்கன்னி காஜல் அகர்வால் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், 11.2 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் மிக குறைவான வித்தியாசத்தில் ஸ்ருதிஹாசன் உள்ளார். இவர்களுக்கு அடுத்து, 9.9 மில்லியன் ஃபாலோயர்ஸுடன் இலியானா மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தி வருகிறார்.

Radio
×