வற்றாப்பளை அம்மனையும் விட்டு வைக்காத 5G?
கூட்டமைப்பின் பின்புற கதவு பேரத்தின் மத்தியில் சர்ச்சைக்குரிய 5ஜி கோபுரங்கள் வடக்கில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அனைத்து இடங்களிலும் ஒரே விதமான உத்தியை பாவித்தே இந்த கோபுரங்கள் பரவி வருகிறது. அந்தந்த சபைகளில் அனுமதியை பெறாமல், சபை தவிசாளரை மட்டும் கவனித்தே இந்த கோபுரங்கள் நடப்படுகின்றன.
யாழ் மாநகரசபையில் ஆரம்பித்த இந்த 5ஜி கோபுரங்கள் தற்போது வற்றாப்பளை அம்மன கோவில் நுழைவாயில் வரை முளைத்துள்ளது.
ஏற்கனவே புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலும் இத்தகைய கோபுரம் நடப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபை முதல் வலி.வடக்கு பிரதேசசபை ,தற்போது புதுக்குடியிருப்பு பிரதேசசபையென எவற்றிலும் முறைப்படி பணம் செலுத்தி அனுமதியை பெறாமல் மாநகர முதல்வர் முதல் தவிசாளர்களை மட்டும் கவனித்து கோபுரம் அமைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே குறித்த கோபுரம் அமைப்பு திட்டத்திற்கு பொறுப்பாக உள்ளவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து, பிரதேசசபையொன்றின் தவிசாளராக இருப்பவர என்பது அம்பலமாகியுள்ளது.
திட்டத்திற்கு பொறுப்பானவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிசாளர் என்பதாலேயே, வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள சபைகளில், சபையின் அனுமதியின்றி, தவிசாளர்களுடன் மட்டும் பேசி கோபுரங்கள் அமைக்கப்படுகிறமை அம்பலமாகியுள்ளது.
இந்நிலையிலேயே வரலாற்று புகழ் மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய நுழைவாயிலில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.