SuperTopAds

பொங்கலுக்குப் போட்டியாக பிரித் ஓதும் பிக்கு - செம்மலையில் பரபரப்பு!

ஆசிரியர் - Admin
பொங்கலுக்குப் போட்டியாக பிரித் ஓதும் பிக்கு - செம்மலையில் பரபரப்பு!

முல்­லைத்­தீவு – செம்­மலை நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் நாளை­ம­று­நாள் பொங்­கல் நிகழ்­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அங்கு அத்­து­மீறி பல்­வேறு விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, பிரித் ஓதும் நிகழ்வுக்கு ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீராவி­ய­டிப்­ பிள்­ளை­யார் ஆல­யத்­தின் பொங்­கல் நிகழ்வு நாளை­ம­று­தி­னம் கோலா­க­ல­மாக நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன. இதனை முன்­னிட்டு கொக்­குத்­தொ­டு­வாய் கோட்­டைக்­கேணி பிள்­ளை­யார் ஆல­யத்­தில் இருந்து பாரம்­ப­ரிய முறைப்­படி மடைப்­பண்­டம் எடுத்து வரப்­பட்டு 108 பானை­க­ளில் பொங்­கல் நிகழ்­வு­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதை­ய­டுத்தே அந்­தப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்த குறித்த விகா­ரை­யில் இன்று தொடக்கம் பிரித் ஓதும் வழி­பா­டு­களை மேற்­கொள்ள குறித்த பிக்கு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளார். இதற்­காக சிங்­கள ராவய அமைப்­பின் தலை­வர்­க­ளும் அழைத்து வரப்­பட்­டுள்­ள­னர்.