மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பேரணி!
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஏற்பாட்டில், இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதி உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மிப்தாரின் மனைவி சல்காவுடம் கலந்துகொண்டிருந்தார்.