மனித உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை!- விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Admin
மனித உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை!- விக்னேஸ்வரன்

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலானது சட்டத்தின் பால் ஒரு மனித உயிரை எடுப்பதற்கு இந்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்த்துவதாக வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோயில் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியின் 19வது அரசியல் யாப்பினை இல்லாது செய்வதாக தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகளின் தலைவர் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு இயக்கத்தினை கட்டி எழுப்பியதாகவும், அதன் தலைவர் ஒரு போதைப் பொருள் கடத்தல் காரர் என்று கூறிய கருத்து தொடர்பிலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி எடுக்கும் முயற்சி மே தாய் மனசு மனிதாபிமானமற்ற செயல் என்றும் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு உண்மையில் கைதிகள் இது தொடர்பில் ஈடுபட்டார்களா?

உண்மையான குற்றச்சாட்டுகள் நிறைவேற்றப்பட்டதா அல்லது அவர்கள் சட்ட சிக்கலுக்கு உள்ளாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இந்த விடயங்களைக் கூட பார்க்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியின் செயலானது சட்டத்தின் பால் ஒரு மனித உயிரை எடுப்பதற்கு இந்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்த்துகின்றது என்றும் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு