SuperTopAds

வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை

ஆசிரியர் - Admin
வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை

வலிகாமத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப்  பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் நாளை செவ்வாய்க்கிழமை(16) காலை-09 மணி முதல் கல்லூரியின் ஆ.சி. நடராசா அரங்கில் கல்லூரியின் அதிபர் வே. த. ஜயந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா. காண்டீபன் சிறப்பு விருந்தினராகவும், ஒட்டிசுட்டான் உதவிப் பிரதேச செயலர் செல்வி- இ. ஜெகநாதசர்மா மற்றும் தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலர் மா. ஆனந்தகுமார் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கல்லூரிச் சமூகம் கேட்டுள்ளது.