11 அடிப்படை உாிமை மீறல் மனுக்கள் உயா் நீதிமன்றில்..! தலையை பிய்த்துக் கொள்ளும் நிலையில் ஜனாதிபதி..
போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டணை விதிக்கும் ஜனாதிபதியின் தீா்மானத்தை எதிா்த்து உயா் நீதிமன்றில் 11 அடிப்படை உாிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதா க கூறப்படுகின்றது.
மரண தண்டணையை அமுல்படுத்த கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டதையடுத்து மரண தண்டணையை எதிர்நோக்கும் கைதிகளின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் எழுவரும், மனித உரிமை ஆர்வலர்களான, பேராசிரியர்களான கமினா குணரத்ன,
கலன சேனாதீர, சமய பெரியார்களான மௌவி மொகமட் கலீல், பௌத்த மதகுருவான கலகொட தம்மானந்த தேரர், பாதிரியார் துலிப் டி சிக்கேரா ஆகியோரும் சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மூலம் உயர்நீதிமன்றில் 11 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களில் சட்டமா அதிபர், நீதி அமைச்சர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதியின் செயளாளர், மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு
மரண தண்டனை அமுல்படுத்த உடனடியாக இடைக்கால தடை உத்தரவு வழங்கும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவில்,1976 ஆண்டிலேயே சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கான இரண்டாவது மூல ஒப்பந்தம்
ஐரோப்பாவை போன்று மரண தண்டனை இல்லாதொழிக்கப்படுவதைக் கோருகின்றது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் பிரகாரம் மரண தண்டனை கொடிய, மனிதாபிமானமற்ற தண்டனைக்கு ஒப்பானதாகும் என்று வாதிப்படுகின்றது.
மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவதற்கு எதிரான மிக முக்கியமான வாதமாக குற்றமற்ற அப்பாவிகளுக்கு குற்றத் தீர்ப்பு வழங்கப்படும் ஆபத்து உண்டு என்பதாகும். இலங்கையில் மரண தண்டனை ஒருபோதும் இல்லாதொழிக்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேல் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கடும் குற்றங்கள் புரிந்ததமைக்காக குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால் கடந்த நான்கு சகாப்தங்களாக மரணதண்டனை
ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.