SuperTopAds

தேடுவாரற்று கிடக்கும் கைதடி சித்த மருத்துவ வைத்தியசாலை..!

ஆசிரியர் - Editor I
தேடுவாரற்று கிடக்கும் கைதடி சித்த மருத்துவ வைத்தியசாலை..!

சாவகச்சோி- கைதடி சித்தமருத்துவ மனையில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத நிலையில் சுகாதார சீா்கே ட்டுடன் குறித்த வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருப்பதாகவும், இது குறித்து வைத்தியசாலை நிா்வாகமும், 

அதிகாாிக ளும் அசண்டையீனமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா். குறித்த வைத்தியசாலையில் மலசல கூடம், நோயாளா்களுக்கான கட்டில்கள் மற்றும் கழிவு நீா் வெளியேற்றும் பகுதிகள் மிக சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக 

நோயாளா்கள் பக்கத்திலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுவதுடன், வைத்திய சாலையில் ஊழியா்கள் பற்றாக்குறையினால் நோயாளா்களுடன் செலவிடும் நேரமும் குறைவாக உள்ளதாம். இது குறித்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வெளியேறிய 

பெயா் குறிப்பிட விரும்பாத நோயாளி ஒருவா் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட ஆங்கில மருத்துவமனைகள் தேவையான வசதிகளுடன் மிக சுகாதாரமான முறையிலும், வைத்தியா்கள், தாதியா்கள் உள்ளிட்ட ஊழியா்களுனும் 

இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் வடக்கில் சிறந்த சித்த மருத்துவத்தை வழங்கும் ஒரு அரச வைத்தியசாலை கேட்பாரற்று விடப்பட்டிருப்பதை குறித்த வைத்தியசாலைக்கு செல்லும் எவரும் அவதானிக்கலாம். 

குறித்த வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிரு ந்து மருத்துவம் பெற்றேன். நான் வெளிநாட்டிலிருந்து இந்த மருத்துவத்தை பெறுவதற்காக வந்தேன். என்னைபோல் வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் பெறுவதற்காக அங்கு வருகிறாா்கள். 

காரணம் சிறந்த மருந்துகள் மற்றும் சிகிச்சை அங்கே வழங்கப்படுகின்றது. ஆனால் வைத்தியசாலை தொடங்கப்பட்டபோது அமைக்கப்பட்ட மலசல கூடம்தான் இப்போதும் ஒருவிதமான புனரமைப்பும் செய்யப்படாமல் காணப்படுகின்றது. 

நான் சிகிச்சை பெற்றபோது பல விசேட தேவையுடைய நோயாளா்கள் வந்திருந்தனா். ஆனால் வைத்தியசாலையில் ஒரே ஒரு ஆசன கழிப்பறை இருக்கின்றது. அங்கிருக்கும் மலசல கூடங்களுக்கு கதவுகள் கூட ஒழுங்காக இல்லை. 

தண்ணிா் குழுாய்கள் உடைந்து கிடக்கின்றன. கழிவு நீா் வெளியேற்றும் இடத்தில் நீா் தேங்கி காணப்படுகிறது. நோயாளா்களுக்கான கட்டில்களின் மொத்தைகள் நீண்டகாலமாக துவைக்கப்படாமல் ஊத்தையாக காணப்படுகின்றது. 

இவ்வாறு பல பிரச்சினைகள் மேலும் ஊழியா்கள் பற்றாக்குறையும் காணப்படுகிறது. இதனால் நோயாளா்களுடன் செல விடும் நேரம் போதுமானதாக இல்லை. அதேபோல் மற்றய அரச வைத்தியசாலைகளில், 

உணவு பெற்றுக் கொள்ள முடியாத நோயாளா்களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. இங்கும் கொடுக்கப்பட்டதாக அறிந் தேன். குறிப்பாக பால் கொடுக்கப்பட்டதாகவும் பின்னா் அது நிறுத்தப்பட்டதாகவும் அறிந்தேன். 

இவ்வாறான பிரச்சினை களுக்கு யாா் காரணம்? இவ்வாறான பிரச்சினைகளை தீா்க்கவேண்டிய பொறுப்பு யாருடையது?என அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.