மஹிந்தவின் சொகுசு மாளிகை உள்ளடங்கலாக 65 ஏக்கா் காணியை சுவீகாிக்க கள்ள திட்டம்..!
காங்கேசன்துறை பகுதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஸவின் சொகுசு பங்களாவை சூழவுள்ள சுமாா் 65 ஏக்கா் காணியை சுவீகாிப்பிற்காக அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
இந்நிலையில் காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 65 ஏக்கர காணியை எதிர்வரும் 4ம் திகதி அளவீடு செய்யும் இரகசிய திட்டத்தை நம்பகரமாக மூலங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
எனினும், அதற்கான முன்னறிவித்தல் அந்த காணி உரிமையாளர்களான பொதுமக்களிற்கு அனுப்பப்படவில்லை. அனேகமாக இன்று அந்த அறிவித்தல் பொதுமக்களிடம் கிடைக்கலாமென தெரிகிறது.
குறுகிய அவகாசத்தில் அறிவித்தல் வழங்கி அளவீடு செய்யும் திட்டமாக இது இருக்கலாமென கருதப்படுகிறது. இதேவேளை, நாளை- 2ம் திகதி- வலி வடக்கு பிரதேச செயலகத்தில் இந்த காணி சுவீகரிப்பு தொடர்பான சம்பிரதாயமான கூட்டமொன்றும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புராதன வழிபாட்டிடங்கள், சமாதி உள்ளடங்கலாக தனியாருக்கு சொந்தமான காணிகள் இவை.ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கைவிட்ட அளவீட்டு பணிகள் மீளவும் ஆரமபிக்கப்படுவது,
இந்த காணி சுவீகரிப்பை அரசு கைவிடவில்லையென்பதையே காண்பிக்கிறது. தமது காணிகளை பாதுகாத்து தருமாறு பொதுமக்கள் நீண்டகாலமாக அரசியல், சிவில் செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
செக்சன் 2 என்ற அளவீட்டு படிமுறை நடந்து முடிந்தால், காணி சுவீகரிப்பின் பெரும் பகுதி நிறைவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.