SuperTopAds

மரணதண்டனை முடிவு - ஐ.நா பொதுச்செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!

ஆசிரியர் - Admin
மரணதண்டனை முடிவு - ஐ.நா பொதுச்செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!

மரணதண்டனையை நிறைவேற்றும் தனது முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரசுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள சிறிசேன இந்த தொலைபேசி உரையாடலின் போது மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தான் தீர்மானித்தமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காகவும் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து இலங்கையின் எதிர்கால தலைமுறையை காப்பாற்றுவதற்காகவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டியது அவசியம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்த தனிநபர் மீதான வெறுப்பு காரணமாகவும் கோபம் காரணமாகவும் நான் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் கைச்சாத்திடவில்லை. நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றுவதற்காகவே உத்தரவில் கைச்சாத்திட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.