SuperTopAds

உங்கள் தொலைபேசிக்கு இப்படி ஒரு குறுந்தகவல் வருகிறதா..? நம்பாதீா்கள்..

ஆசிரியர் - Editor I
உங்கள் தொலைபேசிக்கு இப்படி ஒரு குறுந்தகவல் வருகிறதா..? நம்பாதீா்கள்..

இலங்கையில் உள்ள பிரபல்யமான சுப்பா் மாா்கட்டில் விரும்பிய பொருட்களை இலவசமாக கொள்வனவு செய்யலாம் என பொய் தகவல் ஒன்று தொலைபேசி ஊடாகப் பரப்பபடுவதாகவும் அது தொடா்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனா். 

இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, மக்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்றில் 24 மணித்தியாலங்களும் விரும்பிய முறையில் பொருட்கள் கொள்வனவு செய்யலாம் என நாட்டு மக்களுக்கு குறும்செய்தி மூலம் தகவல் பரப்பப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் இணையத்தளத்திற்கு சமமான இணையத்தளம் ஒன்று உருவாக்கி, அதில் இருந்து வட்ஸ்அப் ஊடாக தகவல் ஒன்று பகிரப்படுகின்றது. அதனை அழுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இணைய தொலைபேசி அழைப்பு ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த தொலைபேசி அழைப்பினை பெற்றால், உரிய நபரின் தொலைபேசியில் உள்ள பணம் உடனடியாக இல்லாமல் போகின்றது. அதுவே மாத கட்டணம் செலுத்தும் தொலைபேசி இணைப்பாளர் என்றால் மாத பட்டியலில் பாரிய தொகை ஒன்று செலுத்துமாறு மாத இறுதி பட்டியல் இணைக்கப்படுகின்றது.

இலங்கை தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இந்த சம்பவம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான எந்தவொரு குறும்தகவல் வந்தாலும் அதனை கிளிக் செய்து பார்வையிட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி தகவலுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.