SuperTopAds

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - இறுதிக்கட்டத்தில் விசாரணை!

ஆசிரியர் - Admin
11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - இறுதிக்கட்டத்தில் விசாரணை!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, கப்பம் பெற்ற பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக சிஐடியினர் இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தனர்.

இன்று நீதிவான் ரங்க திஸாநயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போதே விசேட மேலதிக விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.இந் நிலையில் அந்த விசாரணைகளை முன்னெடுத்து எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு சமூக வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும், பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அது தொடர்பில் ஏற்கனவே சி.ஐ.டி.யின் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வ நீதிமன்றுக்கு அறிவித்தார்.