SuperTopAds

யாழ்.குடாநாட்டில் ஆங்காங்கே அமைக்கப்படும் கோபரங்கள் 5G தொலை தொடா்பு சேவைக்கா..? மக்கள் அச்சம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் ஆங்காங்கே அமைக்கப்படும் கோபரங்கள் 5G தொலை தொடா்பு சேவைக்கா..? மக்கள் அச்சம்..

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமுமம் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.

உலகில் 36 நாடுகள் இச்சேவை குறித்து எச்சரித்துள்ளதுள்ளன. அத்துடன் உலகெங்கும் உள்ள 180 விஞ்ஞானிகளும் 5 G சேவைக்கான மின்காந்த அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.

இதன் அலைவரிசை புற்றுநோய் தாக்கம், குழந்தைகள், கற்பவதிகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அலைக்கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக அமைவதாக 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனை விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். 

வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்ப சேவைக்கு அனுமதி வழங்க தயங்கி வரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.