SuperTopAds

ஒரு மாதகாலத்திற்குள் நியமனம் வழங்குங்கள்..! கல்வியமைச்சு முன் குந்திய தொண்டா் ஆசிாியா்கள்..

ஆசிரியர் - Editor I
ஒரு மாதகாலத்திற்குள் நியமனம் வழங்குங்கள்..! கல்வியமைச்சு முன் குந்திய தொண்டா் ஆசிாியா்கள்..

தொண்டா் ஆசிாியா்கள் 372 பேருக்கு ஆசிாியா் நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் இந்த நியமனத்தில் தவறவிடப்பட்ட 172 தொண்டா் ஆசிாியா்கள் தமக்கு ஒரு மாத காலத்திற்குள் ஆசிாியா் நியமனம் வழங்க வேண்டும் எனக்கோாி வடமாகாண கல்வி அமைச்சு முன்னாக உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா். 

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசியர்கள் தெரிவித்ததாவது, எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள தொண்டராசியர்கள் நியமனத்திற்கு தேவையான, அதாவது சுற்று நிருபத்தில் கேட்கப்பட்ட சகல ஆவணங்களும் எங்களிடமும் இருக்கின்றது. ஆனால் எமக்கான நியமனம் தொடர்பில் எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லை. 

இந்நிலையில் கால நீடிப்பு வழங்காது நிரந்தர நியமனத்தை விரைவில் வழங்கவேண்டும், தொண்டராசியர் பட்டியலை மத்திய கல்வி அமைச்சிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும் , தவறவிடப்பட்ட தொண்டராசியர் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் , தவறவிடப்பட்ட தொண்டராசிரியர்களை அமைச்சரை பத்திரத்திற்குள் உள்ளடக்க வேண்டும், 

ஒருமாத காலத்திற்குள் எமக்கு நேர்முகத் தேர்வு நடைபெற வேண்டும், ஒரு மாத கால த்திற்குள் எமக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பதை எழுத்து மூலமாக எங்களுக்ககு தர வேண்டும் என்பதனை வலியுறுத்தியே இந்தப் போராட்டதை முன்னெடுத்து வருகின்றோம். ஒரு மாத காலத்திற்குள் எமக்கான நேர்முகத் தேர்வை நடத்தி 

தெண்டராசிரியர்களாக எம்மையும் உள்வாங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், அவ்வாறு வழங்காவிடில், எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுப்பபோம் என்றனர்.