நீர்கொழும்பு தேவாலய குண்டுதாரியின் உடற்பாகங்கள் அடக்கம்!

நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறன்று தற்கொலை தாக்குதலை நடத்திய குண்டுதாரியான முஹம்மத் ஹஸ்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள், அங்குருகாரமுல்ல கிராம சேவகர், பொலி ஸார் ஆகியோர் உடன் இருந்தனர். எந்தவித சமய அனுஷ்டானங்களும் இடம்பெறாமல் தற்கொலைதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் பலகையிலான சீல்வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்கொலை தாக்குதல் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட நிலையில் சரியாக இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று 21 ஆம் திகதி புதைக்கப்பட்டது.
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 110 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.