SuperTopAds

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகல்! - புதிய ஆளுநர்கள் விரைவில்

ஆசிரியர் - Admin
அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகல்! - புதிய ஆளுநர்கள் விரைவில்

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். 

இரு ஆளுநர்களின் பதவி விலகல் இராஜிநாமா கடிதங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.     

விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியிருந்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியிருந்தனர்.