யாழ்.கொழும்புத்துறையில் மலசலகூடக் குழிக்குள் கைக்குண்டுகள் மீட்பு!

ஆசிரியர் - Admin
யாழ்.கொழும்புத்துறையில் மலசலகூடக் குழிக்குள் கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்.கொழும்புத்துறை பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டன. 

கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் உள்ள வீட்டின் மலசலகூட குழியை துப்பரவு செய்த போது, அதனுள் கைக்குண்டுகள் காணப்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த குழிக்குள் இருந்து 7 கைக்குண்டுகளை மீட்டனர். மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு