வித்தியா கொலை குற்றவாளி சுவிஸ் குமாரை தப்பிக்க விட்ட பொலிஸ் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை!

ஆசிரியர் - Admin
வித்தியா கொலை குற்றவாளி சுவிஸ் குமாரை தப்பிக்க விட்ட பொலிஸ் அதிகாரி மீது குற்றப்பத்திரிகை!

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுருத்த ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வித்தியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பிச் செல்ல உதவினார் என்று சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.     

2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 எதிரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 

தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக் கொலையின் சூத்திரதாரியாகிய சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரும் ஒருவர்.அவர் தப்பிச் செல்ல உதவினார் என்றே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுருத்த ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு