ஈழத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இன்று மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
கடந்த 13.05.2019 அன்று முல்லைத்தீவு பெருங்கடலில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்ச்சிக்காக தீர்த்தம் எடுத்துவரப்பட்டு உப்புநீரில் விளக்கேற்றி ஆரம்பமான ஆலய உற்சவத்தில் அன்றைய தினம் முதல் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்சி பக்தர்களால் காணக்கூடியதாக உள்ளது.
இன்று வரை இடம்பெறும் ஆலய உற்சவத்தில் இன்று இரவு வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெறுவதோடு இன்று 20.05.2019 அதிகாலை வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கான பண்டம் இந்த ஆலயத்திலிருந்து எடுத்து செல்லப்படும்.
ஆலயத்தில் விசேட கண்ணகியின் வரலாறு கூறும் (புராதன ஓலைச் சுவடி ) ஏடு படிக்கும் வைபவமும் சிறப்புற இடம்பெறுகிறது.
ஆலயத்துக்கு இராணுவ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதோடு பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை செய்துவருவதை அவதானிக்க முடிந்தது.