மணியோசை எழுப்பி மௌன அஞ்சலி!- வடக்கு ஆளுநர் கோரிக்கை

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்யுமாறு வடமாகாண ஆளுநர் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இதனை அடுத்து ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.