கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தன்னை பற்றி வந்த வதந்திக்கு கடிதம் மூலம் வாயை அடைத்த சமந்தா!

ஆசிரியர் - Admin
தன்னை பற்றி வந்த வதந்திக்கு கடிதம் மூலம் வாயை அடைத்த சமந்தா!

சமந்தாவுக்கு அவரது பெற்றோருடன் தகராறு என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு உள்ளது. அதற்கெல்லாம் விடைகொடுக்கும் வகையில் தனது தாய் குறித்து சமந்தா ஒரு கடிதம் எழுதி உள்ளார். 

அதில், ‘எனது தாய் செய்யும் பிரார்த்தனையில் எப்போதும் நான் நம்பிக்கை கொண்டிருப்பேன். அவரது பிரார்த்தனை என் வாழ்வில் மேஜிக் செய்திருக்கிறது. சிறுமியாக இருந்த போது எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் நான் கேட்பேன்.

இப்போதும் அப்படித்தான் கேட்கிறேன். அதற்கு காரணம் எனக்காக அவர் அதை செய்வார் என்பது தெரியும். எனது தாயிடம் உள்ள மிகச் சிறந்த பண்பு என்னவென்றால் தனக்காக ஒருபோதும் அவர் பிரார்த்திப்பதில்லை. 

கடவுளுக்கு அடுத்தபடி அம்மாவைத்தான் சொல்வேன். லவ் யூ அம்மா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உருக்கமான இக்கடிதம் மூலம் தாயுடன் தனக்கு மோதல் இருப்பதாக சொல்பவர்களின் வாயை அடைத்திருக்கிறார் சமந்தா.

Radio
×