இராணுவ சீருடைகள், 30 சிங்கள பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் போலி வைத்தியா் கைது..! அதிா்ந்துபோன பொலிஸாா்.
பௌத்த பிக்குகள் அணியும் ஆடைகள் உள்ளிட்ட பெருமளவு பொருட்களுடன் போலி மருத்துவா் ஒருவரும், அவருடைய உதவியாளரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.
பதுளை வெலிமடைப் பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பிக்குகள் அணியும் ‘சிவுரு’ உடைகள் ஆறு,
இராணுவ உடைகள் இரண்டு, கைவிலங்கு ஒரு சோடி, விமானப்படையினர் அணியும் முகமூடிகள், வெற்றுத் தோட்டாக்கள் முப்பது,
சிங்களப் பெண்களின் தேசிய அடையாள அட்டைகள் ஐந்து, ஆணொருவரின் அடையாள அட்டை ஒன்று, பதினான்கு மில்லி கிராம் எடையுள்ள கஞ்சா பொதி என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.
தம்பவின்ன பகுதியில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்ட போது குறித்த பொருள்கள் மீட்கப்பட்டன. குறித்த வீட்டின் உரிமையாளர் போலி மருத்துவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளராகவும், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் வேட்பாளர் என்றும் ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.